சேலம் அருகே காரில் கொண்டு சென்ற ரூ.1.93 கோடி பறிமுதல்-தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை


சேலம் அருகே காரில் கொண்டு சென்ற ரூ.1.93 கோடி பறிமுதல்-தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 23 March 2021 5:28 AM IST (Updated: 23 March 2021 5:28 AM IST)
t-max-icont-min-icon

சேலம் அருகே காரில் உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.1.93 கோடியை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

வாழப்பாடி:
சேலம் அருகே காரில் உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.1.93 கோடியை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
வாகன தணிக்கை
சேலம் மாவட்டம் ஏற்காடு தொகுதிக்கு உட்பட்ட வாழப்பாடி, அயோத்தியாப்பட்டணம் மற்றும் ஏற்காடு பகுதிகளில் தேர்தல் நிலைக்குழு, பறக்கும்படை, கணக்கீட்டு குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
சேலம் அயோத்தியாப்பட்டணத்தை அடுத்த ஆச்சான்குட்டப்பட்டி அருகே நேற்று இரவு நிலை கண்காணிப்பு குழு அலுவலர் வாசுதேவன் தலைமையிலான குழுவினர், வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சேலம் கன்னங்குறிச்சியை சேர்ந்த சரவணன் மற்றும் 4 பேருடன் சென்ற காரை நிறுத்தி சோதனை செய்தனர்.
ரூ.1.93 கோடி பறிமுதல்
அப்போது அதில் ரூ.1.93 கோடி இருந்தது தெரியவந்தது. அந்த பணத்திற்கு உரிய ஆவணம் இ்ல்லாததால் அதை பறிமுதல் செய்த குழுவினர், ஏற்காடு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் பி.கே.கோவிந்தன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மாணிக்கம் ஆகியோரிடம் ஒப்படைத்தனர்.
தேர்தல் அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட விசாரணையில், இந்த பணம் தனியார் வங்கிக்கு சொந்தமானது என தெரியவந்தது. இருப்பினும் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்டதால், பணத்தை பறிமுதல் செய்து வாழப்பாடி கருவூலத்தில் பாதுகாப்பாக வைத்துள்ளனர்.
உரிய ஆவணங்களை சமர்ப்பித்து, பணத்தை பெற்றுச்செல்லுமாறு தனியார் வங்கி நிர்வாகத்திற்கு தேர்தல் அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
சேலம் அயோத்தியாப்பட்டணம் அருகே ரூ.1.93 கோடி பறிமுதல் செய்யப்பட்ட தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story