பூச்சி மருந்து குடித்து கார் மெக்கானிக் சாவு
திருமணமாகி 7 வருடங்கள் ஆகியும், குழந்தை இல்லாததால் கார் மெக்கானிக் பூச்சி மருந்து குடித்து சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
வண்டலூர்,
செங்கல்பட்டு மாவட்டம் காரணைப்புதுச்சேரி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நீலகண்டன் (வயது 38). கார் மெக்கானிக்கான இவருக்கு திருமணமாகி 7 வருடங்கள் ஆகியும், குழந்தை இல்லை என்று கூறப்படுகிறது.
இதன் காரணமாக மனமுடைந்த அவர், நேற்று முன்தினம் பூச்சி மருந்தை குடித்து மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் உறவினர்கள் அவரை மீட்டு, அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story