புதுச்சேரியில் புதிதாக 47 பேருக்கு கொரோனா தொற்று உறுதி


புதுச்சேரியில் புதிதாக 47 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 23 March 2021 12:26 PM IST (Updated: 23 March 2021 12:26 PM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 47 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி,

புதுச்சேரி சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 519 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், 47 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 40 ஆயிரத்து 433 ஆக உயர்ந்துள்ளது. இவற்றில் மருத்துவமனைகளில் 200 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 212 பேரும் என 412 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கொரோனா பாதிப்பால் ஒருவர் உயிரிழந்த நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 676 ஆக அதிகரித்துள்ளது. இன்று 29 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 39 ஆயிரத்து 345 ஆக உயர்ந்துள்ளது.

Next Story