திருநின்றவூர் அருகே காரில் பதுக்கி வைத்த 225 கிலோ குட்கா பறிமுதல்; 2 பேர் கைது


திருநின்றவூர் அருகே காரில் பதுக்கி வைத்த 225 கிலோ குட்கா பறிமுதல்; 2 பேர் கைது
x
தினத்தந்தி 23 March 2021 4:28 PM IST (Updated: 23 March 2021 4:28 PM IST)
t-max-icont-min-icon

திருநின்றவூர் அருகே காரில் பதுக்கி வைத்த 225 கிலோ குட்கா புகையிலைப்பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

ஆவடி அடுத்த திருநின்றவூர் பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா பதுக்கி வைத்திருப்பதாக வந்த தகவலையடுத்து, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலசந்தர் மற்றும் போலீசார் நேற்று காலை திருநின்றவூர் காந்தி சிலை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த ஒரு ஆட்டோவை மடக்கி போலீசார் சோதனையிட்டனர். அந்த ஆட்டோவில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட சுமார் 40 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப்பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து போலீசார் ஆட்டோவில் வந்தவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், திருநின்றவூர் பிரகாஷ்நகர் பகுதியை சேர்ந்த அகஸ்டின் (வயது 38) என்பதும், அவர் திருநின்றவூர் அடுத்த நடுக்குத்தகை பெரியபாளையம் சாலையில் வசிக்கும் முருகதாஸ் (42) என்பவரிடமிருந்து குட்கா பொருட்களை வாங்கி வந்ததாகவும் போலீசாரிடம் கூறினார்.

இதையடுத்து போலீசார் முருகதாஸ் வீட்டில் இருந்த காரில் சோதித்ததில், குட்கா பதுக்கி வைத்திருப்பது தெரிந்தது. இதையடுத்து சுமார் ரூ.2 லட்சம் மதிப்புள்ள 225 கிலோ குட்காவை பறிமுதல் செய்த போலீசார் முருகதாஸ் மற்றும் அகஸ்டின் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

Next Story