வாலிபர் தவறவிட்ட செல்போனை போலீசார் மீட்பு


வாலிபர் தவறவிட்ட செல்போனை போலீசார் மீட்பு
x
தினத்தந்தி 23 March 2021 9:45 PM IST (Updated: 23 March 2021 9:45 PM IST)
t-max-icont-min-icon

வாலிபர் தவறவிட்ட செல்போனை போலீசார் மீட்டனர்

தென்திருப்பேரை:
செய்துங்கநல்லூரை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவர் காவல் துறை தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். தினமும் காலையில் செய்துங்கநல்லூரில் இருந்து பஸ் மூலம் ஆழ்வார்திருநகரி சென்று உடற்பயிற்சி மேற்கொண்டு வந்தார்.
வழக்கம்போல் நேற்று காலையில் செய்துங்கநல்லூரில் இருந்து தனியார் பஸ் மூலம் ஆழ்வார்திருநகரிக்கு அவர் வந்தார். பஸ்சில் இருந்து இறங்கியதும், செல்போனை தவறவிட்டது தெரிந்தது. உடனே ஆழ்வார்திருநகரி போலீஸ் நிலையத்தில் அவர் புகார் கொடுத்தார். 
இதன்பேரில் ஆழ்வார்திருநகரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இன்னோஸ் குமார், ஒரு போலீஸ்காரருடன் அந்த பஸ்சை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து சென்றார். குரும்பூரில் அந்த பஸ்சை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். விசாரணையில், வெங்கடேஷ் அருகில் அமர்ந்து பயணம் செய்தவர் வழியிலுள்ள கேம்பலாபாத்தில் இறங்கியது தெரியவந்தது. உடனே அங்கிருந்து கேம்பலாபாத் வந்து விசாரித்ததில், அந்த நபர் பஸ்சில் கீழே விழுந்து கிடந்த செல்போனை எடுத்து வைத்துள்ளதாக கூறினார். அது வெங்கடேஷின் செல்போன் என தெரிந்தது. அந்த செல்போனை மீட்ட சப்-இன்ஸ்பெக்டர்,  வெங்கடேஷிடம் ஒப்படைத்தார்.

Next Story