பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு


பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு
x
தினத்தந்தி 23 March 2021 10:13 PM IST (Updated: 23 March 2021 10:13 PM IST)
t-max-icont-min-icon

தேவதானப்பட்டி அருகே பெண்ணிடம் 5 பவுன் சங்கிலியை மர்ம நபர் பறித்து சென்றார்.

தேனி:
தேவதானப்பட்டி அருகே உள்ள கோட்டார்பட்டியை சேர்ந்தவர் கண்ணன். விவசாயி. 

இவருடைய மனைவி நிவேதா (வயது 23). நேற்று முன்தினம் இரவு வீட்டின் கதவை திறந்து வைத்து கணவன்-மனைவி இருவரும் தூங்கிக் கொண்டிருந்தனர். 

அப்போது அங்கு வந்த மர்ம நபர், நிவேதாவின் கழுத்தில் அணிந்து இருந்த 5 பவுன் சங்கிலியை பறித்தார். 

உடனே அவர் திருடன், திருடன் என்று கூச்சலிட்டார். தப்பியோடிய அவனை கண்ணன் பிடிக்க முயன்றார். 

அப்போது அந்த மர்ம நபர், அவரை தாக்கி விட்டு தப்பியோடி விட்டார். இதுகுறித்து தேவதானப்பட்டி போலீசில் கண்ணன் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.


Next Story