இளையான்குடி,
இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் 51-வது விளையாட்டு விழா கல்லூரி ஆட்சிக்குழு தலைவர் முகமது சுபைர் தலைமையில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் அப்பாஸ் மந்திரி அனைவரையும் வரவேற்றுப் பேசினார். கல்லூரி செயலர் ஜபருல்லாஹ் கான் வாழ்த்துரை வழங்கினார். விழாவில் தேனி கனரா வங்கி மண்டல மேலாளர் காளிராஜ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மேலும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற வெற்றியாளர்களுக்கு பரிசுகள், பாராட்டு பத்திரங்கள் வழங்கி பாராட்டினார். உடற்கல்வி இயக்குனர்கள் காளிதாசன், காஜா நஜிமுதீன், வெற்றி ஆகியோர் கலந்து கொண்டனர். விழா நிகழ்ச்சிகளை தமிழ்த்துறை தலைவர் இப்ராஹிம் ஒருங்கிணைத்தார்.