பீஸ் போடுவதற்கு மின்மாற்றி மீது ஏறியவர் மின்சாரம் தாக்கி சாவு
பீஸ் போடுவதற்கு மின்மாற்றி மீது ஏறியவர் மின்சாரம் தாக்கி உயிாிழந்தாா்.
திண்டிவனம்,
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த பெலாக்குப்பம் காலனி பகுதியை சேர்ந்தவர் கணேசன் . இவரது மகன் ரஜினி (வயது 40). இவர் நேற்று காலனி பகுதியில் உள்ள மின்மாற்றியில் பீஸ் போடுவதற்காக ஏறியதாக தெரிகிறது.
அப்போது அவர் மீது மின்சாரம் தாக்கியதில், ரஜினி கீழே விழுந்தார். உடன் அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்கக்ப்பட்ட ரஜினி அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாமாக உயிரிழந்தார். இதுகுறித்து ரோசனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story