146 பேருக்கு கொரோனா பாதிப்பு
146 பேருக்கு கொரோனா பாதிப்பு.
கோவை,
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலை மாநில சுகாதாரத்துறை சார்பில் தினமும் வெளியிடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் வெளியிட்ட பட்டியலில் கோவை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 146 பேருக்கு தொற்று உறுதியானது.
இதன் மூலம் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 57 ஆயிரத்து 413 ஆக உயர்ந்தது. மேலும் கொரோனாவில் இருந்து நேற்று ஒரே நாளில் 86 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர்.
இதன்படி இதுவரை 55 ஆயிரத்து 900 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பு உள்ளனர்.
கோவை மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பலனின்றி 688 பேர் உயிரிழந்து உள்ளனர். நேற்று கொரோனாவுக்கு உயிர் பலி எதுவும் இல்லை.
தற்போது கோவை அரசு ஆஸ்பத்திரி, இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி, தனியார் மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்களில் 825 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கோவையில் கடைசியாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 30ந் தேதி ஒரே நாளில் 146 பேருக்கு கொரோனா உறுதியாக இருந்தது.
அதன் பிறகு 4 மாதங்களுக்கு பிறகு கோவையில் தொற்று எண்ணிக்கை 146ஆக உயர்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
கோவையில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு உயர்ந்து வருவதால், அதை கட்டுப்படுத்த பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
Related Tags :
Next Story