மருத்துவ பரிசோதனை


மருத்துவ பரிசோதனை
x
தினத்தந்தி 23 March 2021 11:14 PM IST (Updated: 23 March 2021 11:14 PM IST)
t-max-icont-min-icon

தேர்தல் பணியில் இருந்து விலக்கு கோரியவர்களுக்கு கலெக்டர் அலுவலகத்தில் மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.

சிவகங்கை,

தேர்தல் பணியில் இருந்து விலக்கு கோரியவர்களுக்கு கலெக்டர் அலுவலகத்தில் மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.

தேர்தல் பணி

சட்டசபை தேர்தலையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை மற்றும் மானாமதுரை (தனி) ஆகிய 4 சட்டசபை தொகுதிகளிலும் சேர்த்து 1,679 வாக்குபதிவு மையங்கள் உள்ளன. இந்த வாக்கு பதிவு மையங்களில் ஒரு மையத்திற்கு 6 பேர் வீதம் பணிபுரிவார்கள். இதற்காக ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், வங்கி பணியாளர்கள் உள்பட 8 ஆயிரத்து 59 பேர் வரை தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 330 பேர் மருத்துவ காரணங்களால் தேர்தல் பணியில் இருந்து விலக்கு அளிக்க கோரியிருந்தனர்
.
மருத்துவ பரிசோதனை

இந்நிலையில் விலக்கு கோரியவர்கள் கூறிய காரணம் உண்மையானது தானா? என்பதை கண்டறிய விலக்கு கோரியவர்களுக்கு நேற்று சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில  ்மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.
சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனை டாக்டர்கள் குழுவினர் தேர்தலில் விலக்கு கோரியவர்கள் கூறிய காரணங்கள் உண்மை தானா? என பரிசோதித்து சான்றிதழ் அளித்தனர். அவ்வாறு சான்றிதழ் பெற்றவர்களுக்கு மட்டும் தேர்தல் பணியி்ல் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்தார்.

Next Story