பொம்மிடி அருகே சரக்கு வாகனத்தில் கொண்டு சென்ற ரூ.5.90 லட்சம் பறிமுதல்


பொம்மிடி அருகே சரக்கு வாகனத்தில் கொண்டு சென்ற ரூ.5.90 லட்சம் பறிமுதல்
x
தினத்தந்தி 23 March 2021 11:21 PM IST (Updated: 23 March 2021 11:23 PM IST)
t-max-icont-min-icon

பொம்மிடி அருகே சரக்கு வாகனத்தில் கொண்டு சென்ற ரூ.5.90 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

பொம்மிடி,

தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அருகே உள்ள பி.துறிஞ்சிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி அவர்கள் சோதனை செய்தனர். அதில் ரூ.5 லட்சத்து 90 ஆயிரம் கொண்டு சென்றது தெரியவந்தது. 

இதுகுறித்து வேன் டிரைவரிடம் பறக்கும் படையினர் விசாரணை நடத்தினர். அப்போது அவர் சேலம் மாவட்டம் வலசையூரை சேர்ந்த முருகன் என்பதும், அந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லை என்பதும் தெரியவந்தது. இதையடுத்து பறக்கும் படையினர் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.

ஒப்படைப்பு

பின்னர் அவர்கள் பாப்பிரெட்டிப்பட்டி தேர்தல் நடத்தும் அலுவலர் நஸீர் இக்பால், துணை தாசில்தார்கள் மகேஸ்வரன், செங்கோடன் ஆகியோரிடம் அந்த பணத்தை ஒப்படைத்தனர். உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பணத்தை பெற்று செல்லுமாறு டிரைவரிடம் அதிகாரிகள் அறிவுறுத்தினர். பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கருவூலத்தில் ஒப்படைத்தனர். 

Next Story