சூதாடிய 9 பேர் கைது
சூதாடிய 9 பேர் கைது செய்யப்பட்டனர்
ராமநாதபுரம்
ராமநாதபுரம் பஜார் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் உள்ள மனமகிழ் மன்றத்தில் பண மதிப்பு குறிப்பிடப்பட்டிருந்த கலர் டோக்கன் வைத்து சிலர் சூதாடிக்கொண்டிருந்தது தெரிந்தது. இதனை தொடர்ந்து போலீசார் இளையராஜா (வயது 40), கார்த்திகேயன் (35), காந்தாரிஅம்மன்கோவில் தெரு கமல்(35), ராஜசேகர்(39), பி.கொடிக்குளம் விவேக்(29), திருவள்ளுவர் நகர் சவுந்திரபாண்டியன்(44), மருதுபாண்டியர்நகர் முனியசாமி (52), முலூர் குருநாதன் (30), பசும்பொன்நகர் கேசவன் (50) ஆகிய 9 பேரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து ரூ.5 ஆயிரத்து 200 மதிப்புள்ள 17 கலர் டோக்கன், 6 செல்போன்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story