முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்


முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்
x
தினத்தந்தி 23 March 2021 11:36 PM IST (Updated: 23 March 2021 11:36 PM IST)
t-max-icont-min-icon

முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது

முதுகுளத்தூர்
தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கி உள்ளது. பொது இடங்களில் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் அவ்வாறு அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தநிலையில் முதுகுளத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பேரூராட்சி அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் பொது இடங்களில் முக கவசம் அணியாமல் சுற்றித்திரிந்த பொதுமக்களுக்கு அபராதம் விதித்தனர். மேலும் அவர்களுக்கு முக கவசம் வழங்கினர். இதுபோல் சமூக இடைவெளியை கடைபிடிக்காத கடைகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் பொதுமக்கள் நலன் கருதி அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டுமென முதுகுளத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் மாலதி பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Next Story