காளையார்கோவில்,
காளையார்கோவில் அருகே உள்ள வலையம்பட்டி புனித செபஸ்தியார் திருத்தலத்திற்கு ஆண்டுதோறும் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் தவக்காலத்தில் செவ்வாய்க்கிழமை திருப்பயணம் மேற்கொண்டு திருவழிபாட்டு நிகழ்வுகளில் பங்கேற்று இறையாசீர் பெறுவது வழக்கம். அதே போல் நேற்று தவக்கால சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. காளையார்கோவில், சாத்தரசன்பட்டி, ஆண்டிச்சூரணி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து மக்கள் பாதயாத்திரையாக திருத்தலம் வந்தார்கள். திருத்தலம் வந்ததும் சிவகங்கை இளையோர் பணிக்குழு செயலர் பிரிட்டோவால் சிலுவைப்பாதை வழிநடத்தப்பட்டது. தொடர்ந்து வழிபாட்டுடன் சிவகங்கை மறைவட்ட அதிபர் சேசுராஜ் தலைமையில் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. பங்குத்தந்தை சூசை ஆரோக்கியசாமி, சேசு அமல்ராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.