தேர்தல் நடத்தை விதிமுறைகளை அமல்படுத்த வேட்பாளர்கள் ஆதரவு தரவேண்டும் என்று உடுமலையில் தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் நடந்த கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

தேர்தல் நடத்தை விதிமுறைகளை அமல்படுத்த வேட்பாளர்கள் ஆதரவு தரவேண்டும் என்று உடுமலையில் தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் நடந்த கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
x
தினத்தந்தி 23 March 2021 11:54 PM IST (Updated: 23 March 2021 11:54 PM IST)
t-max-icont-min-icon

தேர்தல் நடத்தை விதிமுறைகளை அமல்படுத்த வேட்பாளர்கள் ஆதரவு தரவேண்டும் என்று உடுமலையில் தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் நடந்த கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

உடுமலை,:
தேர்தல் நடத்தை விதிமுறைகளை அமல்படுத்த வேட்பாளர்கள் ஆதரவு தரவேண்டும் என்று உடுமலையில் தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் நடந்த கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
வேட்பாளர்கள் கூட்டம்
தமிழக சட்டமன்றத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இறுதி பட்டியல் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. அதன்படி உடுமலை சட்டமன்றத்தொகுதியில் 15 வேட்பாளர்களும், மடத்துக்குளம் சட்டமன்றத்தொகுதியில் 15 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.
இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டதைத்தொடர்ந்து இந்த தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், நேற்று வேட்பாளர்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து அழைப்பு விடுத்திருந்தனர். 
அதன்படி உடுமலை மற்றும் மடத்துக்குளம் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான கூட்டம் நேற்று உடுமலை எலையமுத்தூர் சாலையில் உள்ள ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில் பெரும்பாலான வேட்பாளர்களின் பிரதிநிதிகளே கலந்துகொண்டனர். கூட்டத்திற்கு தேர்தல் பார்வையாளரான (பொது) ஐ.ஏ.எஸ்.அதிகாரி கபில்மீனா, தேர்தல் செலவின பார்வையாளரான இந்திய வருவாய்த்துறை (ஐ.ஆர்.எஸ்) அதிகாரி பஷந்த்குமார் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.
ஒத்துழைப்பு
உடுமலை சட்டமன்றத்தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரான ஆர்.டி.ஓ.கீதா, மடத்துக்குளம் சட்டமன்றத்தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரான மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை அதிகாரி ஜெயந்தி, உடுமலை துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமார் உள்ளிட்டோர் பேசினர்.
கூட்டத்தில் அதிகாரிகள் பேசும்போது அனுமதிக்கப்பட்ட வாகனங்களை மட்டுமே தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்தவேண்டும். கூட்டங்கள் நடத்துவதற்கு முன் அனுமதி பெறவேண்டும். ஒரு இடத்தில் கூட்டம் நடத்த அனுமதி கோரி யார் முதலில் வருகிறார்களோ, அவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் அனுமதி வழங்கப்படும். தேர்தல் நடத்தை விதிமுறைகளை வேட்பாளர்கள் மற்றும் அவர்களது பிரதிநிதிகள் அனைவரும் பின்பற்றி தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

Next Story