மடத்துக்குளம் அருகே உள்ள துங்காவியில் பேக்கரியின் மேற்கூரையை உடைத்து ரூ.1 லட்சத்தை திருடிச்சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடிவருகிறார்கள்.
மடத்துக்குளம் அருகே உள்ள துங்காவியில் பேக்கரியின் மேற்கூரையை உடைத்து ரூ.1 லட்சத்தை திருடிச்சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடிவருகிறார்கள்.
மடத்துக்குளம்:
மடத்துக்குளம் அருகே உள்ள துங்காவியில் பேக்கரியின் மேற்கூரையை உடைத்து ரூ.1 லட்சத்தை திருடிச்சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடிவருகிறார்கள்.
இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பேக்கரி கடை
மடத்துக்குளம் அருகே உள்ள துங்காவி ஊராட்சியில் 9-வது வார்டு பகுதியில், வசித்து வருபவர் பக்ரூதீன் (வயது 36). இவரது சொந்த ஊர் கேரளா மாநிலம் மலப்புரம் ஆகும். இவர் தனது குடும்பத்துடன் துங்காவிக்கு வந்து வசித்தபடி துங்காவி பஸ் நிலையம் அருகில் கடந்த 15 ஆண்டுகளாக பேக்கரி நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று பக்ருதீன் இரவு 10 மணி அளவில் தனது கடையின் வியாபாரத்தை முடித்து விட்டு, கடையை பூட்டிவிட்டு, அருகில் உள்ள தனது வீட்டுக்கு சென்று விட்டார்.
ரூ.1 லட்சம் திருட்டு
பின்னர் நேற்று காலை 5 மணிக்கு வழக்கம் போல் கடையை திறந்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது, கடையின் மேற்கூரை உடைக்கப்பட்டு கிடந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கடையில் பணம் வைக்கும் லாக்கரை திறந்து பார்த்தார். இதில் அவர் வைத்து இருந்த ரூ.1 லட்சம் திருட்டு போனது தெரியவந்தது.
இதுகுறித்து உடனடியாக கணியூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
மர்ம ஆசாமிகள் கைவரிசை
இது குறித்து பக்ருதீன் கூறுகையில் வழக்கமாக பேக்கரியை முன்பக்கமாக பூட்டி விட்டு, சாவியை கொண்டு சென்று விடுவதால், உள்ளே பணம் வைக்கும் மேஜை லாக்கரை பூட்டாமல் சென்றுவிடுவது வழக்கம். இதனை நன்கு கவனித்த யாரோ மர்ம ஆசாமிகள் சிலர் தான் நள்ளிரவில் கடையின் மேற்கூரையை உடைத்து உள்ளே புகுந்து பணத்தை திருடி சென்று இருக்கலாம் என்றார்.
பின்னர் அவர் கணியூர் போலீஸ் நிலையத்தில் இதுகுறித்து கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story