நேரடி நெல்கொள்முதல் நிலையம் திறக்கக்கோரி கலவை தாலுகா அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
நேரடி நெல்கொள்முதல் நிலையம் திறக்கக்கோரி கலவை தாலுகா அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
கலவை
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை தாலுகாவில் உள்ள வாழைப்பந்தல், மேலபந்தை, மேல்புதுப்பாக்கம், தோனி மேடு, தட்டசேரி, செங்கனவரம் ஆகிய கிராமங்களில் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களை திறக்கக் கோரி தமிழ்நாடு விவசாய சங்கத்தின் சார்பில் நேற்று கலவை தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்டார செயலாளர ்சம்பத் தலைமை தாங்கினார். வட்டார தலைவர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார்.
நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயம் செய்திட வேண்டும், விவசாயிகளுக்கு தரமான விதைகளை வேளாண்மை அலுவலகத்தின் மூலமாக வழங்கவேண்டும், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பயிர் கடன் மற்றும் விவசாய நகை கடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story