ஆனைமலையில் கொப்பரை தேங்காய் ஏலம்


ஆனைமலையில் கொப்பரை தேங்காய் ஏலம்
x
தினத்தந்தி 24 March 2021 12:17 AM IST (Updated: 24 March 2021 12:26 AM IST)
t-max-icont-min-icon

ஆனைமலையில் கொப்பரை தேங்காய் ஏலம் நடந்தது.

பொள்ளாச்சி,

ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெற்றது. இதற்கு ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் மணிவாசகம் தலைமை தாங்கினார். 

ஏலத்திற்கு ஆனைமலை, அம்பராம்பாளையம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த 74 விவசாயிகள் கொப்பரை தேங்காய்களை கொண்டு வந்தனர். கொப்பரை தேங்காய்கள் தரம் பிரிக்கப்பட்ட ஏலம் விடப்பட்டன. 

9 வியாபாரிகள் கலந்துகொண்டு போட்டி போட்டு ஏலம் எடுத்தனர். அதன்படி 285 மூட்டை முதல் தர கொப்பரை தேங்காய் ரூ.115.75 முதல் ரூ.135.55 வரையும், 259 மூட்டை 2-ம் தர கொப்பரை தேங்காய் ரூ.85.50 முதல் ரூ.100 வரையும் ஏலம் போனது. 

கடந்த வாரத்தை விட 70 மூட்டை கொப்பரை தேங்காய் வரத்து அதிகரித்து இருந்தது. ஆனால் விலையில் பெரிய அளவில் மாற்றம் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story