தி.மு.க.தேர்தல் அறிக்கை செல்லாத கள்ளநோட்டு


ஓ.பன்னீர் செல்வம்
x
ஓ.பன்னீர் செல்வம்
தினத்தந்தி 24 March 2021 12:29 AM IST (Updated: 24 March 2021 12:30 AM IST)
t-max-icont-min-icon

தி.மு.க.தேர்தல் அறிக்கை செல்லாத கள்ளநோட்டு என்று மேட்டுப்பாளையம் தேர்தல் பிரசாரத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.

மேட்டுப்பாளையம்,

தி.மு.க.தேர்தல் அறிக்கை செல்லாத கள்ளநோட்டு  என்று மேட்டுப்பாளையம் தேர்தல் பிரசாரத்தில் துணை முதல்-அமைச்சர்  ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.

ஓ.பன்னீர் செல்வம்

கோவை, நீலகிரி மாவட்டங்களில் அ.தி.மு.க. வேட்பாளர்களாக ப.தனபால் (அவிநாசி) பி.ஆர்.ஜி.அருண்குமார் (கவுண்டம்பாளையம்) ஏ.கே.செல்வராஜ் (மேட்டுப்பாளையம்) கப்பச்சிவினோத் (குன்னூர்) பொன் ஜெயசீலன் (கூடலூர்), மற்றும் கூட்டணி கட்சி சார்பில் பா.ஜனதா கட்சி வேட்பாளராக போஜராஜன் (ஊட்டி) ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இந்த வேட்பாளர்களை ஆதரித்து மேட்டுப்பாளையம் பஸ் நிலையம் அருகில் துணை முதல்-அமைச்சர்  ஓ.பன்னீர்செல்வம் நேற்று  தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் காட்டிய வழியில் நாங்கள் பயணித்து கொண்டி ருக்கின்றோம்.  
தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக விளங்கி வருகிறது. 

தமிழகத்தில் வீடு இல்லாத ஏழை,எளிய மக்களுக்கு முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வீடுகள் கட்டித்தரும் திட்டத்தை அறிவித்தார். -


இதுவரை 6 லட்சத்து 50 ஆயிரம் வீடுகளை அரசு கட்டித் தந்துள்ளது. மீதம் உள்ள வர்களுக்கு 2023-ம் ஆண்டுக்குள் வீடுகள் கட்டித் தரப்படும். 


தேர்தல் வாக்குறுதி


திருமண உதவித் திட்டம் ரூ.25 ஆயிரமாக இருந்தது. தற்போது அந்த திட்டத்தின்  தொகை தேர்தல் அறிக்கையில் ரூ.35 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.  36 லட்சம் பேருக்கு முதியோர் உதவி தொகை ரூ.1000-ம் என்று இருந்ததை  ரூ.2000-ம் ஆக உயர்த்தப்பட்டு வழங்கப்பட உள்ளது.

 கடந்த ஐந்தாண்டு காலத்தில் 19 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நெல் உற்பத்தியில் தமிழகம் தொடர்ந்து 6-வது ஆண்டாக முதலிடத்தில் உள்ளது.


 கடந்த  17 ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் இருந்த காவிரி பிரச்சினையை தீர்க்க அரசாணை வெளியிட்டார் ஜெயலலிதா. தி.மு.க.ஆட்சியில் அராஜகம் தலைவிரித்தாடியது. ஆனால் அ.தி.மு.க. மக்களுக்கு பாதுகாப்பாகவும் உற்ற தோழனாகவும் விளங்கி வருகிறது. 

2006-ம் ஆண்டு நடந்த தேர்தலில் தி.மு.க இரண்டு ஏக்கர் நிலம் வழங்குவதாக தேர்தல் வாக்குறுதியாக கூறியிருந்தார்கள். ஆனால் இதுநாள் வரை இரண்டு ஏக்கர் நிலம் யாருக்கும் வழங்கப்படவில்லை. ஆனால் அ.தி.மு.க. அரசு தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி உள்ளது. 

கள்ள நோட்டு


 தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை கள்ள நோட்டு. அது செல்லாது. அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை நல்ல நோட்டு. எதிர்கால சந்ததியினரும் பயனடையும் வகையில்  நல்ல திட்டங்களை அ.தி.மு.க. அரசு அறிவித்துள்ளது. இந்த சட்டமன்ற தேர்தலில் நல்ல தீர்ப்பு வழங்கிய எஜமானர்கள் நீஙகள். 


முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஏழை, எளிய மக்கள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக ரூ.35 ஆயிரம் கோடியை ஒதுக்கினார் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு 16 வகையானயான உபகரணங்களை வழங்கினார். இதன் மூலம் தமிழகத்தில் பட்டதாரிகளின் எண்ணிக்கை 49 சதவீதமாக உயர்ந்தது.


 இதனால் கல்வியில் முதல் மாநிலமாக திகழ்கிறது. எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க. அரசு நல்ல முறையில் செயல்பட்டு கொண்டிருக்கிறது. ஆகவே மீண்டும் தமிழகத்தில் அ.தி.மு.க.அரசு தொடர்ந்திட இரட்டை இலை மற்றும் தாமரை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story