முகம்மதுஜான் எம்.பி. மாரடைப்பால் ‘திடீர்’ மரணம்
தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் அ.முகம்மதுஜான் எம்.பி. ‘திடீர்’ மாரடைப்பால் காலமானார்.
சிப்காட்
தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் அ.முகம்மதுஜான் எம்.பி. ‘திடீர்’ மாரடைப்பால் காலமானார்.
முகம்மதுஜான் எம்.பி.
தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் அ.முகம்மதுஜான் எம்.பி. (வயது 72). 2011-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ராணிப்பேட்டை தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் ஜெயலலிதா அமைச்சரவையில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக பணியாற்றினார்.
தற்போது அ.தி.மு.க.வில் மாநில சிறுபான்மை பிரிவு நல இணைச் செயலாளராக பொறுப்பு வகித்து வந்த அவர் தமிழ்நாடு வக்பு வாரிய தலைவராகவும், மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்து வந்தார்.
வாக்கு சேகரிப்பு
இந்த நிலையில், ராணிப்பேட்டை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் எஸ்.எம்.சுகுமாருக்கு ஆதரவாக தீவிர வாக்குசேகரிப்பு பணியில் ஈடுபட்டு வந்தார்.
நேற்று மதியம் சுமார் 1.30 மணியளவில் வாலாஜாவில் அ.தி.மு.க. வேட்பாளர் எஸ்.எம்.சுகுமாருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். அதன்பிறகு மதிய உணவுக்காக முகம்மதுஜான் எம்.பி. தனது வீட்டுக்கு வந்தார். சாப்பிட்டுவிட்டு சிறிது நேரம் ஓய்வு எடுத்தார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.
உடனடியாக அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அவரது குடும்பத்தினர் அழைத்து சென்றனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்து பார்த்து முகமதுஜான் எம்.பி. ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
முகமதுஜான் எம்.பி. திடீர் மறைவு அவருடைய குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், அ.தி.மு.க. மற்றும் பல்வேறு கட்சியினர், தொழிலதிபர்கள், முக்கிய பிரமுகர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியது.
குடும்பம்
முகமதுஜான் எம்.பி. ராணிப்பேட்டையில் உள்ள காயிதே மில்லத் இஸ்மாயில் தெருவில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவரது மனைவி சஹீனாபர்வீன் (57). இவர்களுக்கு அலீம் அக்தர் என்கிற சலீம், கிஷர் உசேன், உமர்பாரூக் ஆகிய 3 மகன்களும், ஷபியா என்ற மகளும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி விட்டது.
Related Tags :
Next Story