மோட்டார் சைக்கிள் விபத்தில் சிறுவன் பலி
மோட்டார் சைக்கிள் விபத்தில் சிறுவன் பலியானார்.
ஆவுடையார்கோவில், மார்ச்.24-
கோட்டைப்பட்டினம் சதாம் நகரை சேர்ந்தவர் ரவி. இவரது மகன் விக்னேஷ் என்ற ராகேஷ் (வயது 16). இவர் அறந்தாங்கியில் உள்ள உறவினர் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுவிட்டு மீண்டும் கோட்டைப்பட்டினம் நோக்கி வந்து கொண்டிருந்தார். செம்மனாம் பொட்டல்அருகே சென்றபோது, திடீரென்று கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோர இருந்த பள்ளத்துக்குள் பாய்ந்தது. இதில் கீழே விழுந்ததில் பலத்த காயம் அடைந்த ராகேஷ் உடனடியாக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட அவர், செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஆவுடையார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story