முககவசம் அணியாதவர்களிடம் ரூ.15 ஆயிரம் அபராதம் வசூல்
வேலூர் மாவட்டத்தில் முககவசம் அணியாமல் சென்றவர்களிடம் ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
வேலூர்
வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்கள். ஆனால் பொது மக்கள் முககவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் பொது இடங்களில் சுற்றித் திரிகிறார்கள். அதனால் கடந்த சில நாட்களாக தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதனைத் தடுக்கும் விதமாக பொதுஇடங்களில் முககவசம் அணியாதவர்களுக்கு ரூ.200-ம், இருசக்கர வாகனங்களில் செல்வோருக்கு ரூ.250-ம், 4 சக்கர வாகனங்களில் செல்வோருக்கு ரூ.500-ம் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. மேலும் அந்த நபருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
முககவசம் அணியாத நபர்களுக்கு அபராதம் விதிக்கும் பணியில் உள்ளாட்சி அமைப்புகளை சேர்ந்த 40 குழுக்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தக் குழுவினர் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் முக்கிய பகுதிகளில் நின்று அந்த வழியாக இருசக்கர வாகனங்கள், ஆட்டோ, கார்களில் முககவசம் அணியாத நபர்களுக்கு அபராதம் விதித்து வருகிறார்கள். வேலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் முககவசம் அணியாதவர்களுக்கு ரூ.15,500 அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது என்று மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் மணிவண்ணன் தெரிவித்தார்.
Related Tags :
Next Story