கணவன் கண் முன்னே மனைவி பலி


கணவன் கண் முன்னே மனைவி பலி
x
தினத்தந்தி 24 March 2021 1:08 AM IST (Updated: 24 March 2021 1:08 AM IST)
t-max-icont-min-icon

சாத்தூர் அருேக கார் - இரு சக்கர வாகனம் மோதிய விபத்தில் கணவன் கண் முன்னே மனைவி பரிதாபமாக இறந்தார்.

சாத்தூர்,
சாத்தூர் அருேக கார் - இரு சக்கர வாகனம் மோதிய விபத்தில் கணவன் கண் முன்னே மனைவி பரிதாபமாக இறந்தார். 
சாமி தரிசனம் 
தூத்துக்குடி மாவட்டம் சில்லாங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமண பெருமாள் (வயது57). இவரது மனைவி இந்திராணி (50).
இவர்கள் இருவரும் நத்தத்துப்பட்டியில் உள்ள கோவிலுக்கு சாமி கும்பிட்டு விட்டு உப்பத்தூர் விலக்கு அருகில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, தூத்துக்குடி மாவட்டம் அகிலாண்டபுரத்தை சேர்ந்த வர்கீஸ் (50) என்பவர் ஓட்டி வந்த கார், இருசக்கர வாகனம் மீது மோதியது. 
மனைவி பலி 
இந்த விபத்தில் இந்திராணி பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த லட்சுமண பெருமாளை அருகில் உள்ளவர்கள்  மீட்டு சிகிச்சைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 
சம்பவ இடத்தில் உயிரிழந்த இந்திராணியின் உடலை மீட்டு சாத்தூர் தாலுகா போலீசார், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
டிரைவர் கைது 
இதையடுத்து கார் டிரைவர் வர்கீசை கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கணவன் கண் முன்னே மனைவி இறந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story