மணப்பெண்ணின் தாய் நகைகள் மாயம்


மணப்பெண்ணின் தாய் நகைகள் மாயம்
x
தினத்தந்தி 24 March 2021 1:13 AM IST (Updated: 24 March 2021 1:13 AM IST)
t-max-icont-min-icon

திருமண மண்டபத்தில் மணப்பெண்ணின் தாய் நகைகள் மாயமானது.

சிவகாசி, 
விருதுநகர் ஆர்.ஆர்.நகர் கோட்டை நத்தம் பகுதியை சேர்ந்தவர் சங்கரன். இவரது மகள் காயத்திரிக்கும், டி.கான்சாபுரத்தை சேர்ந்த முருகேசன் மகன் பிரபாகரன் என்பருக்கும் கடந்த 15-ந் தேதி மாரனேரி அருகில் உள்ள பூலாவூரணியில் ஒரு தனியார் திருமண மண்டபத்தில் திருமணம் நடந்தது. அந்த திருமணத்துக்கு வந்திருந்த பெண்ணின் தாய் மகாலட்சுமி மற்றும் உறவினர் சந்தானலட்சுமி ஆகியோரின் நகைகள் 16 பவுனை ஒரு பையில் வைத்துவிட்டு இரவு தூங்கி விட்டனர். பின்னர் அதிகாலை எழுந்து திருமணத்துக்கு தயாரான போது நகைகளை சரி பார்த்த போது நகைகள் வைத்திருந்த பையை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்தவர்கள் காணாமல் போன நகைகள் குறித்து பல இடங்களில் விசாரித்தனர். ஆனால் நகைகள் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதை தொடர்ந்து மாரனேரி போலீசில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஆத்தீஸ்வரன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
---------


Next Story