வாகன சோதனையில் ரூ.5¾ லட்சம் பறிமுதல்
வாகன சோதனையில் ரூ.5¾ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
வாடிப்பட்டி,மார்ச்
சோழவந்தான் தொகுதியில் 3 பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டு தொகுதி முழுவதும் பணப்பட்டுவாடாவை தடுக்கும் விதமாக தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று மாலை சோழவந்தான் நகரி பிரிவில் பறக்கும் படை அதிகாரி வாசுகி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் கணேசன், ஏட்டுகள் மணிராஜா, ரேணுகாதேவி ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரிடம் சோதனை செய்தபோது அவர் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.5 லட்சத்து 46 ஆயிரத்தை கொண்டு சென்றது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து அந்த பணத்தை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், அவர் சோழவந்தானில் உள்ள சிகரெட் மொத்த விற்பனை கம்பெனியின் ஊழியராக பணியாற்றியது தெரிய வந்தது. கைப்பற்றப்பட்ட பணம் தாலுகா அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி ஜெஸ்டின் ஜெயபால் பார்வையிட்டபின் சார்நிலை கருவூலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
Related Tags :
Next Story