சோதனை சாவடி அமைத்து தீவிர வாகன சோதனை
தாயில்பட்டியில் சோதனை சாவடி அமைத்து தீவிர வாகன சோதனை நடைபெற்று வருகிறது.
தாயில்பட்டி,
வெம்பக்கோட்டை போலீஸ் சரகம் மேல தாயில்பட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளியில் 8 வாக்குச்சாவடிகளும், தாயில்பட்டி நாடார் ஜார்ஜ் உயர்நிலைப் பள்ளியில் 3 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இந்த வழியாக செல்லும் வாகனங்களை சோதனை செய்யும் வகையில் சாத்தூரிலிருந்து சிவகாசி செல்லும் மெயின் ரோட்டில் தாயில்பட்டி பஸ் ஸ்டாப் மற்றும் கோட்டையூர் பஸ் ஸ்டாப் ஆகிய 2 இடங்களில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வழியாக செல்லும் அனைத்தும் வாகனங்களும் தீவிர சோதனை செய்யப்பட்டு அனுப்பப்படுகிறது என வெம்பக்கோட்டை இன்ஸ்பெக்டர் பாலாஜி கூறினார்.
Related Tags :
Next Story