கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை
கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது
மதுரை, மார்ச்.
மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கொரோனா தொற்று உலகையே அச்சுறுத்தி வருகிறது. தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த தொற்று பரவாமல் தடுக்க பல முறை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. ஆனாலும் கொரோனா பரவல் குறைந்ததாக தெரியவில்லை.
எனவே சமூக இடைவெளியை பின்பற்றாதவர்களுக்கு அதிக அபதாரம் விதிக்கவும், கொரோனா ஆராய்ச்சி நிலையங்களை அதிகரிக்கவும், ஊரடங்கு உத்தரவை முழுமையாக கடை பிடிக்கவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அவர் மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் சுந்தரேஷ், ஆனந்தி ஆகியோர் நேற்று விசாரித்தனர். அப்போது, கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள் ஏற்கனவே வகுக்கப்பட்டு உள்ளன. இந்த வழிமுறைகளை மீறுபவர்கள் மீது பேரிடர் மேலாண்மை தடுப்புச்சட்டம் மற்றும் இந்திய தண்டனை சட்டப்படி நடவடிக்கை எடுக்க வழிவகை உள்ளது.
எனவே கொரோனா தடுப்பு நெறிமுறைகளை மீறுபவர்கள் மீது சட்டப்படி அபராதம் விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என நீதிபதிகள் உத்தரவிட்டு, மனுவை முடித்து வைத்தனர்.
Related Tags :
Next Story