புதிய சமுதாயம் உருவாக வேண்டும்: தி.மு.க.-அ.தி.மு.க.வுக்கு வாக்களிக்க கூடாது முன்னாள் எம்.எல்.ஏ. திருச்சி கே.சவுந்தரராஜன் பேட்டி
புதிய சமுதாயம் உருவாக வேண்டும் என்றால் தி.மு.க.-அ.தி.மு.க.வுக்கு வாக்களிக்க கூடாது என்று முன்னாள் எம்.எல்.ஏ. திருச்சி கே.சவுந்தரராஜன் கூறினார்.
புதிய சமுதாயம் உருவாக வேண்டும்:
தி.மு.க.-அ.தி.மு.க.வுக்கு வாக்களிக்க கூடாது
முன்னாள் எம்.எல்.ஏ. திருச்சி கே.சவுந்தரராஜன் பேட்டி
திருச்சி, மார்ச்.24-
அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.வும் அறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். திராவிட கூட்டமைப்பு என்ற இயக்கத்தின் நிறுவனருமான திருச்சி கே.சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-
அறிஞர் அண்ணா தி.மு.க.வை உருவாக்கிய போது அதில் உறுப்பினராக இருந்தவன் நான். அதன் பின்பு 1972-ம் ஆண்டு அக்கட்சியிலிருந்து பிரிந்து எம்.ஜி.ஆர். அண்ணா தி.மு.க.வை உருவாக்கிய போது நிறுவனர்கள் என்ற முறையில் சேர்ப்பு கடிதத்தில் கையெழுத்திட்ட 12 பேரில் நானும் ஒருவன். அந்த இயக்கம் அவர் மறைவுக்குப் பின், ஜெயலலிதா கையில் சிக்கி உருமாறியது. சசிகலா- நடராஜன்- டி.டி.வி. தினகரன் ஆளுகைக்கு கொண்டுசெல்லப்பட்டது. தற்போது பாரதீய ஜனதா தமிழகத்தில் காலூன்ற அ.தி.மு.க. வழி வகுக்கிறது. தற்போது நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டு வைத்திருப்பது தற்கொலைக்கு சமம் என்றே கருதுகிறேன். இதுபோல தி.மு.க.வில் வாரிசு அரசியலே இருக்கக்கூடாது என்று கருதியவர் அண்ணா. அவரது மறைவுக்குப் பின் கருணாநிதி தலைமையிலான தி.மு.க. தற்போது வாரிசு அரசியலை உருவாக்கி பாழ் படுத்திவிட்டது. எனவே வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் புதிய சமுதாயம் படைக்க வேண்டும் என்றால் தி.மு.க.- அ.தி.மு.க. கட்சிகளுக்கு வாக்களிக்க கூடாது. தமிழகத்தில் மதவாத சக்திகள் கால் ஊன்ற நாம் வழிவகுக்கக் கூடாது. சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர் கொள்கைகளை உயர்த்திப் பிடிக்க அனைவரும் ஒன்றிணைந்து கட்சியை காப்பாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முன்னதாக அறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். திராவிட கூட்டமைப்பு நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
Related Tags :
Next Story