சேரன்மாதேவியில் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட முயன்ற பொதுமக்கள்


சேரன்மாதேவியில் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட முயன்ற பொதுமக்கள்
x
தினத்தந்தி 24 March 2021 2:16 AM IST (Updated: 24 March 2021 2:16 AM IST)
t-max-icont-min-icon

சேரன்மாதேவியில் போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட முயன்றனர்.

சேரன்மாதேவி, மார்ச்:
சேரன்மாதேவி மூல கோவில் தெருவை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் சிவா (வயது 28). இவர் வெளியூரில் டிரைவராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த 20-ந் தேதி வழக்கு விசாரணை ஒன்றுக்காக சொந்த ஊருக்கு வந்துள்ளார். விசாரணை முடிந்து சக நண்பர்களுடன் வீட்டில் இருந்த சிவாவையும், அவரது கூட்டாளிகளையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்ததாக கூறப்படுகிறது. இதற்கு கண்டனம் தெரிவித்து அவரது உறவினர்கள் நேதாஜி சுபாஷ் சேனை தலைவர் மகாராஜன் தலைமையில் நேற்று மாலை சேரன்மாதேவி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட முயன்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் சேரன்மாதேவி உதவி போலீஸ் சூப்பிரண்டு பிரதீப், அவரது உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது சிவாவின் உறவினர்கள் விசாரணைக்காக வந்தவரை போலீசார் கைது செய்து தாக்கியுள்ளதாக குற்றம்சாட்டினர். இதுகுறித்து விசாரணை செய்வதாக உதவி போலீஸ் சூப்பிரண்டு உறுதி அளித்ததன் பேரில் அவரது உறவினர்கள் மற்றும் நேதாஜி சுபாஷ் சேனை அமைப்பினர் கலைந்து சென்றனர்.

Next Story