நெல்லை பகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
நெல்லை பகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் ஆய்வு செய்தார்.
நெல்லை, மார்ச்:
நெல்லை பகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் ஆய்வு செய்தார்.
போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 6-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இதில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் அமைதியான முறையில் ஓட்டுப்பதிவு நடைபெற தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. துணை ராணுவம், போலீசாரின் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் நேற்று பதற்றமான வாக்குச்சாவடிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.
28 வாக்குச்சாவடிகள்
ராமையன்பட்டி, சேதுராயன்புதூர், அழகியபாண்டியபுரம், வாகைகுளம், உக்கிரன்கோட்டை ஆகிய பகுதிகளில் உள்ள 28 வாக்குச்சாவடிகளை நேரில் பார்வையிட்டு, பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
அப்போது நெல்லை ஊரக துணை போலீஸ் சூப்பிரண்டு அர்ச்சனா, மானூர் இன்ஸ்பெக்டர் ராமர், சப்-இன்ஸ்பெக்டர் லிபி பால்ராஜ் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story