வேட்பாளர்கள் செலவு கணக்கை சமர்ப்பிக்க வேண்டும்- கலெக்டர் விஷ்ணு உத்தரவு


வேட்பாளர்கள் செலவு கணக்கை சமர்ப்பிக்க வேண்டும்- கலெக்டர் விஷ்ணு உத்தரவு
x
தினத்தந்தி 24 March 2021 2:33 AM IST (Updated: 24 March 2021 2:33 AM IST)
t-max-icont-min-icon

வேட்பாளர்கள் தங்கள் செலவு கணக்கை சமர்ப்பிக்க வேண்டும் என நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு உத்தரவிட்டுள்ளார்.

நெல்லை, மார்ச்:
இந்திய தேர்தல் ஆணைய விதிகளின்படி, நெல்லை மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் செலவு கணக்குகளை பிரசாரத்தின்போது குறைந்தது 3 முறை ஆய்வுக்கு சமர்ப்பிக்க வேண்டும். செலவு கணக்கை வேட்பாளர் அல்லது வேட்பாளரால் நியமிக்கப்பட்ட முகவர்கள், தேர்தல் செலவு பார்வையாளரிடம் ஏற்கனவே வேட்பாளரிடம் வழங்கப்பட்ட தேர்தல் செலவு விவர பதிவேட்டை சமர்ப்பிக்க வேண்டும். அதன்படி வருகிற 26-ந்தேதி (வெள்ளிக்கிழமை), 30-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மற்றும் 3-ந்தேதி (சனிக்கிழமை) ஆகிய 3 நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சமர்பிக்க வேண்டும். அந்தந்த தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியின் அலுவலகத்தில் ஆய்வு செய்யப்படும்.
செலவு கணக்கை தாக்கல் செய்ய வரும்போது வேட்பாளர் பெயரில் தேர்தல் செலவுக்கு தொடங்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகம், காசோலை புத்தகம், வங்கி பதிவேடு, அன்றாட கணக்கு பதிவேடு சுருக்க அறிக்கை மற்றும் செலவு செய்த வகைக்கு ஆதாரமாக பற்றுச்சீட்டு, ரசீதுகள் ஆகியவற்றையும், அதன் 2 நகல்களும் தேதி வாரியாக சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த தகவலை நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு தெரிவித்து உள்ளார்.

Next Story