பா.ம.க. பிரசார வாகன விளம்பர பதாகையை கிழித்த வாலிபர் கைது
விருத்தாசலம் அருகே பா.ம.க. பிரசார வாகன விளம்பர பதாகையை கிழித்த வாலிபர் கைது செய்யப்பட்டனா்.
விருத்தாசலம்,
விருத்தாசலம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர் கார்த்திகேயனை ஆதரித்து பிரசாரம் வாகனம் பெரியவடவாடியில் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த வாகனத்தில் இருந்த விளம்பர பதாகையை அதே கிராமத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் கிழித்தார். இதை அந்த வாகனத்தின் டிரைவரான சின்னபண்டாரங்குப்பம் கிராமத்தை சேர்ந்த பாவாடை மகன் நித்தியானந்தம்(வயது 26) என்பவர் தட்டிக்கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர், அவரை திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து பெரியவடவாடியை சேர்ந்த தங்கராசு மகன் ரஞ்சித்குமார்(20) என்பரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story