லோடு ஆட்டோ திருடிய வாலிபர் கைது


லோடு ஆட்டோ திருடிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 24 March 2021 2:43 AM IST (Updated: 24 March 2021 2:43 AM IST)
t-max-icont-min-icon

விக்கிரமசிங்கபுரம் அருகே லோடு ஆட்டோ திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

விக்கிரமசிங்கபுரம், மார்ச்:
விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள சிவந்திபுரம் எம்.ஜி.ஆர். தங்கநகரை சேர்ந்தவர் ராமசாமி மகன் அருணாசலம் (வயது 38). இவர் சொந்தமாக லோடு ஆட்டோ வைத்து தொழில் செய்து வருகிறார். சம்பவத்தன்று இரவு வழக்கம் போல் தனது வீட்டின் முன் லோடு ஆட்டோவை நிறுத்தி இருந்தார். மறுநாள் காலையில் பார்த்தபோது லோடு ஆட்டோவை காணவில்லை. 
இதுகுறித்து அருணாசலம் விக்கிரமசிங்கபுரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், லோடு ஆட்டோைவ சிவந்திபுரம் சக்திநகரைச் சேர்ந்த சடையன் மகன் வைகுண்டமணி (21) என்பவர் திருடியதும், மதுரையில் கொண்டு போய் விற்க முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சாத்தூர் பகுதியில் வைத்து வைகுண்டமணியை கைது செய்து, லோடு ஆட்டோவை மீட்டனர். 

Next Story