சேலம் மாவட்டத்தில் 33 பேருக்கு கொரோனா பாதிப்பு


சேலம் மாவட்டத்தில் 33 பேருக்கு கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 24 March 2021 3:58 AM IST (Updated: 24 March 2021 3:58 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் நேற்று 33 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

சேலம்:
சேலம் மாவட்டத்தில் நேற்று 33 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.
33 பேர்
சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 35 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று 33 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதாவது, சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 23 பேர், ஆத்தூர், எடப்பாடி, சேலம் ஒன்றியம், ஓமலூர், சங்ககிரி, பனமரத்துப்பட்டி, வீரபாண்டி ஆகிய பகுதிகளில் தலா ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
13 பேர் டிஸ்சார்ஜ்
மேலும் கிருஷ்ணகிரி, நாமக்கல், திருப்பத்தூரில் இருந்து சேலம் வந்த தலா ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்கள் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33 ஆயிரத்து 118 ஆக அதிகரித்துள்ளது. மேலும் ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 13 பேர் குணமடைந்து விட்டதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 197 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Next Story