விவசாயிகளையும் ,ஏழைகளையும் முன்னேற்றுவதே எனது முதல் கடமை - பரமக்குடி தொகுதி தி.மு.க .வேட்பாளர் முருகேசன் வாக்குறுதி
விவசாயிகளையும், ஏழைகளையும் முன்னேற்றுவதே எனது முதல் கடமை என பரமக்குடி தொகுதி தி.மு.க .வேட்பாளர் முருகேசன் வாக்குறுதி அளித்தார்.
பரமக்குடி,
பரமக்குடி( தனி) சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட போகலூர் ஒன்றியத்தில் கிராமம், கிராம மாகச் சென்று தி.மு.க. வேட்பாளர் செ.முருகேசன் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். அப்போது இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்த ஏராளமான பெண்கள் திரண்டு வந்து முருகேசனுக்கு வரவேற்பு அளித்தனர். கிராம மக்கள் ஆரத்தி எடுத்தனர். பின்பு பிரச்சாரத்தின் போது வேட்பாளர் முருகேசன் குழந்தைகளை தூக்கி கொஞ்சினார். அதை பார்த்த வாக் காளர்கள் ஆரவாரத்துடன் அவரை வரவேற்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
பின்பு வாக்காளர்கள் மத்தியில் வேட்பாளர் முருகேசன் பேசியதாவது:
தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் வரும் தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடிக் கும்.உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் எனக்கு வாக்களித்து என்னை அமோக வெற்றி பெறச் செய்தால் விவசாயிகளை பாதுகாத்து அவர்களுக்கு உறுதுணையாக இருப்பேன். வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் வாழ்வாதாரமும், பொருளாதாரமும், உயர நடவடிக்கைகளை மேற் கொள்வேன். படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் தொழிற் சாலைகளையும் தொழில்களையும் உருவாக்குவேன்.
பருவ நிலை மாற்றத்தால் விவசாயம் பாதிக்கப்படும் போது விவசாயிகளுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையை எந்தவித கால தாமதமின்றி உடனடியாக வழங்க நடவடிக்கை மேற்கொள்வேன். தமிழகம் முழுவதும் தி.மு.க.வின் அலை வீசுகிறது. பரமக்குடி தொகு தியில் போட்டியிடும் எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து அமோக வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
அ.தி.மு.க. பா.ஜ.க. கூட்டணி மக்களால் ஒதுக்கப்பட்ட கூட்டணி கடந்த பாராளுமன்ற தேர்தலில் இவர்களுக்கு பாடம் புகட்டியது போல் வரும் சட்ட மன்ற தேர்தலில் இவர்களுக்கு தகுந்த பாடம் புகட்டி வீட்டுக்கு அனுப்புவோம். இவ்வாறு பேசினார்.
அவருடன் தொகுதிக் கழக பொறுப்பாளர் திசை வீரன் ,முன்னாள் அமைச்சர் டாக்டர் சுந்தரராஜ் . போகலூர் ஒன்றிய பொறுப்பாளர் வக்கீல் கதிரவன் ஒன்றிய பொருளாளர் குணசேகரன்,பொதுக்குழு உறுப்பினர் வக்கீல் பூமிநாதன், ஒன்றிய கவுன்சிலர் பாதாள பைரவன் தென்மொழி, விஜய குமார் உள்பட நிர்வாகிகளும் உடன் கட்சியினரும் வாக்கு சேகரித்தனர்.
Related Tags :
Next Story