பாலக்கரை பகுதியில் திருச்சி கிழக்கு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் வெல்லமண்டி நடராஜன் தீவிர பிரசாரம் - பொதுமக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு


பாலக்கரை பகுதியில் திருச்சி கிழக்கு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் வெல்லமண்டி நடராஜன் தீவிர பிரசாரம் - பொதுமக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு
x
தினத்தந்தி 24 March 2021 10:53 AM IST (Updated: 24 March 2021 10:59 AM IST)
t-max-icont-min-icon

பாலக்கரை பகுதியில் திருச்சி கிழக்கு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் வெல்லமண்டி நடராஜன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

மலைக்கோட்டை,

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரும், அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன் நேற்று திருச்சி கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட பாலக்கரை பகுதியில் எடத்தெரு, இருதயபுரம் உள்ளிட்ட 22, 23 ஆகிய வார்டுகளில் வீதி, வீதியாக நடந்து சென்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். 

அப்போது அவர் வீடு, வீடாக சென்று, அ.தி.மு.க. ஆட்சியில் அரசின் சாதனைகளை எடுத்து கூறியும், குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,500, ஆண்டுக்கு 6 சிலிண்டர் இலவசம், வாஷிங்மிஷின் வழங்கப்படும், கல்விக்கடன் தள்ளுபடி உள்ளிட்ட அ.தி.மு.க.வின் அத்தனை தேர்தல் வாக்குறுதிகளும் 100 சதவீதம் நிறைவேற்றப்படும் என்று கூறி, இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். மேலும் எம்.ஜி.ஆர். பாணியில் வயதானவர்களிடம் நலம் விசாரித்து, தன்னை அறிமுகம் செய்து ஆசிபெற்றார். 

அப்போது ஏராளமான இடங்களில் அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்தும், ஆண்கள் தேங்காய் மூலம் திருஷ்டி சுற்றியும் வரவேற்றனர். அவருடன் எம்.ஜி.ஆர். இளைஞரணி மாநில இணை செயலாளர் சீனிவாசன், ஆவின் சேர்மன் கார்த்திகேயன், அவைத்தலைவர் அய்யப்பன், இணை செயலாளர் ஜாக்குலின், பகுதி செயலாளர்கள் வெல்லமண்டி சண்முகம், ஏர்போர்ட் விஜி, அன்பழகன், சுரேஷ்குப்தா, மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், வெல்லமண்டி ஜவகர்லால் நேரு, வட்ட செயலாளர்கள் ஜெயராஜ், ரபீக் உள்பட அ.தி.மு.க. எம்.ஜி.ஆர். மன்றம், வழக்கறிஞர் பிரிவு,  எம்.ஜி.ஆர். இளைஞரணி, மகளிரணி, மாணவரணி, இளைஞர் இளம்பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்ப பிரிவு, சிறுபான்மை பிரிவு நிர்வாகிகள், பாரதீய ஜனதா கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், மூவேந்தர் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு ஆதரவு திரட்டினர்.

Next Story