தி.மு.க. ஆட்சி அமைந்ததும், சின்னாளபட்டியில் "பல்நோக்கு மருத்துவமனை கொண்டுவரப்படும்" - முன்னாள் அமைச்சர் இ.பெரியசாமி உறுதி


தி.மு.க. ஆட்சி அமைந்ததும், சின்னாளபட்டியில் பல்நோக்கு மருத்துவமனை கொண்டுவரப்படும் - முன்னாள் அமைச்சர் இ.பெரியசாமி உறுதி
x
தினத்தந்தி 24 March 2021 11:37 AM IST (Updated: 24 March 2021 11:37 AM IST)
t-max-icont-min-icon

தி.மு.க. ஆட்சி அமைந்ததும் சின்னாளபட்டியில் பல்நோக்கு மருத்துவமனை கொண்டுவரப்படும் என்று முன்னாள் அமைச்சர் இ.பெரியசாமி உறுதியளித்தார்.

சின்னாளபட்டி, 

ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் இ.பெரியசாமி மீண்டும் போட்டியிடுகிறார். அவர் தனது தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் சூறாவளி பிரசாரம் செய்து, வாக்கு சேகரித்து வருகிறார். செல்லும் இடமெல்லாம் பொதுமக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.

அதன்படி, நேற்று பித்தளைப் பட்டி, மைக்கேல்பட்டி, வக்கம்பட்டி, ஆரியநல்லூர், முன்னிலைகோட்டை, ரெங்கசாமிபுரம், அமலிநகர், பெருமாள்கோவில்பட்டி, முருகம்பட்டி, அம்பாத்துரை, சின்னாளபட்டி உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித் தார்.

சின்னாளபட்டியில் பிரசாரத்தில் ஈடுபட்ட இ.பெரியசாமி, பொதுமக்கள் மத்தியில் பேசியதாவது:-

கடந்த 10 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தில் பொதுமக்களுக்கு எந்தவித நன்மையும் கிடைக்கவில்லை. பெட் ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் விலை பல மடங்கு உயர்ந்துவிட்டது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். விலை உயர்வை கட்டுப் படுத்த மத்தியமாநில அரசுகள் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. 10 ஆண்டுகளாக ஆத்தூர் தொகுதியில் என்னை வெற்றி பெற செய்த மக்களுக்காக நான் எண்ணற்ற திட்டங் களை செய்துள்ளேன். தி.மு.க. ஆட்சிக்காலத் தில் கொண்டுவரப்பட்ட அனைத்து திட்டங்களையும், அ.தி.மு.க. அரசு முடக்கி வைத்துவிட்டது. 

இந்த தேர்தலில் வெற்றி பெற்று தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முதியோர் உதவித்தொகை ரூ.1,500 வழங்கப்படும். 60 வயதுக்கு கீழ் உள்ள அனைத்து குடும்பத்தில் உள்ள பெண்களுக்கும் மாதந் தோறும் ரூ.1,000 வழங்கப்படும். கொரோனா நிவாரண நிதியாக அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் ரூ.4 ஆயிரம் வழங்கப்படும். பெண்கள் அரசு பஸ்களில் இலவசமாக பயணம் செய்யலாம். 

அரசின் அனைத்து திட்டங் களும் அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்கும்படி வழிவகை செய்யப்படும். கிராமங்களில் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு போர்க்கால அடிப்படையில் குடிநீர் திட்டங்கள் நிறைவேற் றப்படும். தமிழகத்தில் காலியாகவுள்ள 3 லட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பப் படும்.  உடனடியாக எந்த ஒரு முறைகேடுக்கும் இடமின்றி தகுதியானவர்களை கொண்டு நிரப்பப்படும். சின்னாளபட்டியில் அரசு கலைக்கல்லூரியும், மின் மயானமும் உடனடியாக அமைக்கப்படும். மேலும் சுங்குடி சேலை உற்பத்தியில் உலக அளவில் பிரசித்தி பெற்ற சின்னாளபட்டியில் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா,  பல்நோக்கு மருத்துவமனை, அனைத்து தரப்பு மக்களின் வேலைவாய்ப்புக்காக சிப் காட் தொழிற்சாலையும், சாயப்பட்டறை கழிவுநீரை சுத்திகரிக்க சுத்திகரிப்பு நிலையமும் அமைக் கப்படும் என்பதை உறுதிபட தெரிவித்து கொள்கிறேன். எனவே மக்கள் தி.மு.க.வை ஆதரித்து, உதயசூரியன் சின்னத்தில் ஓட்டுப்போட வேண்டும். 

இவ்வாறு அவர் பேசினார். 

இந்த பிரசாரத்தில் ஆத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் முருகேசன், அம்பை ரவி, ஆத்தூர் ஒன்றியக்குழு தலைவர் மகேஸ்வரி, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் சிவக்குமார், ஊராட்சி மன்ற தலைவர்கள் சேகர் (அம்பாத்துரை),  எஸ்.பி.கருப்பையா (தொப் பம்பட்டி), ராஜா (செட்டி யபட்டி), ஆறுமுகம் (ஆலமரத்துப்பட்டி), சின்னா ளபட்டி பேரூராட்சி முன் னாள் துணைத்தலைவர் எம்.வி.முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story