சைதாப்பேட்டையில் போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் தூக்குப்போட்டு தற்கொலை
சைதாப்பேட்டையில் போக்குவரத்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை,
சென்னை சைதாப்பேட்டை காவலர் குடியிருப்பில் வசித்து வந்தவர் பாலாஜி (வயது 50). இவர் மயிலாப்பூர் போக்குவரத்து காவல் பிரிவில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் பாலாஜி நேற்று முன்தினம் பணிக்கு சென்று வந்த பின்னர், வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்து வந்த சைதாப்பேட்டை போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசாரின் விசாரணைஇல், பாலாஜி சக்கரை நோயால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. மேலும், அவருக்கு குடிப்பழக்கம் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் பணிச்சுமையா? குடும்ப பிரச்சினையா? அல்லது உடல் நலக்குறைவா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story