சாயர்புரம் அருகே ஆடுகள் திருடிய 3பேர் கைது


சாயர்புரம் அருகே ஆடுகள் திருடிய 3பேர் கைது
x
தினத்தந்தி 24 March 2021 7:33 PM IST (Updated: 24 March 2021 7:33 PM IST)
t-max-icont-min-icon

சாயர்புரம் அருகே ஆடுகள் திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

சாயர்புரம்:
சாயர்புரம் அருகே உள்ள பட்டாண்டிவிளையை சேர்ந்தவர் பெரிய முத்துராமன் (வயது 38). கூலி தொழிலாளி. இவர் ஆடுகள் வளர்த்து வருகிறார். நேற்றுமுன்தினம் இவரது ஆடுகள் நட்டாத்தி பெட்ரோல் பங்க் அருகே மேய்ந்து கொண்டிருந்தன. அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த முத்தையாபுரம் வீரநாயக்கன் தட்டை சேர்ந்த சக்திவேல் (30), செந்தில்குமார் (36), வசவப்பபுரத்தை சேர்ந்த மாரிமுத்து (40) ஆகியோர் ஆடுகளை திருடிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி செல்ல முயன்றனர். அப்போது அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த பொதுமக்கள் 3 பேரையும் பிடித்து சாயர்புரம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் 3 பேரையும் கைது செய்தனர்.


Next Story