நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மதுபானம் கடத்தல்- விற்பனையை தடுக்க சிறப்பு குழு கலெக்டர் பிரவீன்நாயர் தகவல்


நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மதுபானம் கடத்தல்- விற்பனையை தடுக்க சிறப்பு குழு கலெக்டர் பிரவீன்நாயர் தகவல்
x
தினத்தந்தி 24 March 2021 7:50 PM IST (Updated: 24 March 2021 7:50 PM IST)
t-max-icont-min-icon

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மதுபானம் கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாக நாகை மாவட்ட கலெக்டர் பிரவீன்நாயர் கூறினார்.

நாகப்பட்டினம்:-
நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மதுபானம் கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாக நாகை மாவட்ட கலெக்டர் பிரவீன்நாயர் கூறினார். 

சிறப்பு குழு

தமிழகத்தில் வருகிற 6-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடக்கிறது. இதையொட்டி பல்வேறு இடங்களில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. 
இந்த நிலையில் மதுபாட்டில்களை கடத்தி செல்லுதல், விற்பனை செய்தல் உள்ளிட்டவற்றை தடுக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. 
அதன்படி நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மதுபானம் கடத்துதல், விற்பனையை தடுப்பதற்காக சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
 இதுகுறித்து நாகை மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான பிரவீன்நாயர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சட்டசபை தேர்தல்

தமிழக சட்டசபை தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிகளுக்கு முரணாக மதுபானங்கள் பதுக்குதல், கடத்துதல், விற்பனை செய்வதை கண்காணிக்கும் பொருட்டு, மாவட்ட வாரியாக மது விலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார், கலால் துறை அலுவலர்கள் அடங்கிய சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக, மதுபானம் பதுக்குதல், வினியோகம் மற்றும் விற்பனை தொடர்பான புகார்களை கோட்ட கலால் அலுவலர் முருகானந்தம் (செல்போன் எண்- 9965121519), டாஸ்மாக் மேலாளர் ஜெயபாலன் (செல்போன் எண் - 8072366975) ஆகியோரை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
பெண் போலீஸ்
தலைமை பெண் போலீஸ் உமா (செல்போன் எண் - 9498164941) என்பவரையும் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story