கூடலூர் அருகே மகாமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
கூடலூர் அருகே மகாமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
கூடலூர்,
கூடலூர் தாலுகா பாண்டியாறு அரசு தேயிலை தோட்டம் பகுதியில் மகா மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் கும்பாபிஷேக விழாவையொட்டி கடந்த 21-ந் தேதி வாஸ்து சாந்தி பூஜை நடந்தது. 22-ந் தேதி விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமமும், காலை 7.30 மணிக்கு முகூர்த்தக்காலும் நடப்பட்டது.
23-ந் தேதி மாலை 5 மணிக்கு மேளதாளங்கள் முழங்க கங்கை கரையில் இருந்து செந்தமிழ்நகர் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் வழியாக புனித நீர் மற்றும் முளைப்பாரி ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வரப்பட்டது. இதைத் தொடர்ந்து இரவு 7 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து 10 மணிக்கு யந்திர ஸ்தாபனம், திருமேனி பிரதிஷ்டை செய்யப்பட்டது.
நேற்று காலை 6 மணிக்கு 2-ம் கால யாக பூஜையும், நாடி சந்தானம் உள்பட சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் 9 மணிக்கு யாகசாலையில் இருந்து புனித நீர் கலசங்கள் எடுக்கப்பட்டு ஊர்வலமாக கோவிலை வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்ந்து 10 மணிக்கு கோவில் விமான கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து மூலவர் உள்பட பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் மற்றும் அபிஷேக அலங்கார பூஜைகள் நடந்தன.
தொடர்ந்து அம்மனுக்கு அலங்கார சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story