திருவாரூர் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை


திருவாரூர் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை
x
தினத்தந்தி 24 March 2021 10:41 PM IST (Updated: 24 March 2021 10:41 PM IST)
t-max-icont-min-icon

தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்டத்தையொட்டி திருவாரூர் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளித்து கலெக்டர் சாந்தா உத்தரவிட்டுள்ளார்.

திருவாரூர்:
தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்டத்தையொட்டி திருவாரூர் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளித்து கலெக்டர் சாந்தா உத்தரவிட்டுள்ளார். 
உள்ளூர் விடுமுறை 
இதுகுறித்து திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாந்தா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்ட திருவிழாவை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்தில் இன்று(வியாழக்கிழமை) உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. இதற்கு பதிலாக வருகிற 17-ந்தேதி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது. விடுமுறை தினத்தில் மாவட்டத்திலுள்ள கருவூலங்களும், சார்நிலை கருவூலங்களும் அரசு பாதுகாப்பான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறைந்தபட்ச பணியாளர்களுடன் செயல்படும். தேர் திருவிழாவில் கலந்து கொள்ளும் பக்தர்கள் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சமூக இடைவெளியை பின்பற்றி, முககவசம் அணிந்து, அரசால் தெரிவிக்கப்பட்டுள்ள நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story