தேர்தலில் வாக்களிப்பதற்கு வசதியாக வால்பாறைக்கு கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்
தேர்தலில் வாக்களிப்பதற்கு வசதியாக வால்பாறைக்கு கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
வால்பாறை,
வால்பாறை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பலர் வெளியூரில் வேலை செய்து வருகிறார்கள். குறிப்பாக கோவை, ஈரோடு, பழனி, பல்லடம், பொள்ளாச்சி உள்பட பல்வேறு பகுதிகளில் இருக்கிறார்கள்.
சட்டமன்ற தேர்தல் வருகிற 6-ந் தேதி நடக்கிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வும் செய்யப்பட்டு வருகின்றன.
சிறப்பு பஸ்கள்
மேலும் வாக்காளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்று வாக்கிளிக்க வசதியாக சிறப்பு பஸ்களும் விடப்பட உள்ளன.
இந்த நிலையில் வெளியூர்களில் இருக்கும் வால்பாறை பகுதியை சேர்ந்தவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு எளிதாக சென்று வாக்களிக்க வசதியாக சிறப்பு பஸ்கள் இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து வால்பாறை பகுதியை சே்ாந்தவர்கள் கூறியதாவது:-
வால்பாறையில் உள்ள 59 ஆயிரத்து 80 வாக்காளர்களில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்களர்கள் வெளியூர்களில்தான் வசித்து வருகிறார்கள்.
இவர்கள் தேர்தலில் சொந்த ஊருக்கு வந்து வாக்களிக்க வால்பாறைக்கு கூடுதல் சிறப்பு பஸ்கள் விட்டால்தான் எளிதாக வந்து செல்ல முடியும்.
எனவே தேர்தலையொட்டி இந்த பகுதியை சேர்ந்த வாக்காளர்களின் வசதிக்காக வால்பாறைக்கு சிறப்பு பஸ்களை இயக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story