ரூ.6 கோடியே 53 லட்சம் பணம்-பொருட்கள் பறிமுதல்


ரூ.6 கோடியே 53 லட்சம்  பணம்-பொருட்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 24 March 2021 11:54 PM IST (Updated: 24 March 2021 11:54 PM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை ரூ.6 கோடியே 53 லட்சம் பணம் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

புதுக்கோட்டை, மார்ச்.25-
புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை ரூ.6 கோடியே 53 லட்சம் பணம் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
வாகன தணிக்கை
சட்டமன்ற தேர்தலையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறை மீறல்களை தடுக்க பறக்கும்படை, நிலயைான கண்காணிப்பு குழுவினர் தீவிர ரோந்து மற்றும் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணம் இல்லாமல் எடுத்து செல்லப்படும் பணம் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா, பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை ரொக்கம் ரூ.60 லட்சத்து 19 ஆயிரத்து 849 மற்றும் ரூ.5 கோடியே 91 லட்சத்து 15 ஆயிரத்து 898 மதிப்பிலான நகைகள், மதுபானங்கள் உள்ளிட்டவை என மொத்தம் ரூ.6 கோடியே 53 லட்சத்து 99 ஆயிரத்து 484 மதிப்பில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
88 வழக்குகள்  பதிவு
தேர்தல் விதி மீறல்கள் தொடர்பாக மொத்தம் 88 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Next Story