வாகன சோதனையில் ரூ.3 லட்சம் பறிமுதல்
வாகன சோதனையில் ரூ.3 லட்சம் பறிமுதல்.
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம் அருகே காரமடை தோலம்பாளையம் ரோட்டில் ரயில்வே கேட் அருகில் பறக்கும் படை குழு அலுவலர் பூங்கொடி தலைமையில் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது காரமடை மரியா புரத்தைச் சேர்ந்த கருப்புசாமி (வயது 42) என்பவர் இரண்டு சக்கர வாகனத்தில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டுவந்த ரூ.83 ஆயிரத்து 300-ஐ பறிமுதல் செய்தனர்.
இதுபோல் பறக்கும் படை அலுவலர் வேலாயுதம் தலைமையில் போலீசார் மேட்டுப்பாளையம்-சிறுமுகை ரோடு சங்கர்நகர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சிறுமுகையை சேர்ந்த வீரராஜ் என்பவர் இருசக்கர வாகனத்தில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவந்த ரூ.95 ஆயிரத்து 650 பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் நிலை கண்காணிப்பு குழு அலுவலர் சந்திரசேகர் தலைமையில் சங்கர்நகர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சத்தி மெயின் ரோடு தண்ணீர்பந்தல் பகுதியில் காரில் உலகநாதன் என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவந்த ரூ.63 ஆயிரம் கைப்பற்றப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
அதேபோல் பறக்கும் படை அலுவலர் வேலாயுதம் தலைமையில் காரமடை அருகே மருதூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காரில் காரமடையை சேர்ந்த குருபிரசாத் என்பவர் கொண்டுவந்த ரூ. 55 ஆயிரம் கைப்பற்றப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
ஒரு நாளில் ரூ.2 லட்சத்து 96 ஆயிரத்து 950-ஐ பறக்கும்படையினர் பறிமுதல் செய்தனர். இதனை மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் குமரேசனிடம் ஒப்படைத்தனர்.
Related Tags :
Next Story