சலூன் கடையில் ரூ.3½ லட்சம் திருட்டு


சலூன் கடையில் ரூ.3½ லட்சம் திருட்டு
x
தினத்தந்தி 25 March 2021 12:31 AM IST (Updated: 25 March 2021 12:31 AM IST)
t-max-icont-min-icon

சலூன் கடையில் ரூ.3½ லட்சம் திருட்டு

மதுரை,மார்ச்
மதுரை நியூ எல்லீஸ் நகர் பகுதியை சேர்ந்தவர் முரளிதரன் (வயது 31). இவர் பெரியார் பஸ் நிலையம் கட்டபொம்மன் சிலை அருகே உள்ள வணிக வளாகத்தின் முதல் மாடியில் சலூன் கடை வைத்துள்ளார். சம்பவத்தன்று இரவு இவர் வேலை முடிந்து கடையை பூட்டிவிட்டு சென்றார். மறுநாள் காலை கடையை திறக்க வந்தபோது முன்கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே முரளிதரன் இது குறித்து திலகர்திடல் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர். இதில் கடையின் உள்ளே பணப்பெட்டியில் வைத்திருந்த 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் திருடப்பட்டது தெரியவந்தது. 
இது குறித்த புகாரின் பேரில் திலகர்திடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் போலீசார் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். 
இந்த திருட்டுச் சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story