பஸ் நிலையத்திற்குள் பஸ்கள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்கப்படுமா?


பஸ் நிலையத்திற்குள் பஸ்கள் வந்து செல்ல  நடவடிக்கை எடுக்கப்படுமா?
x
தினத்தந்தி 25 March 2021 12:46 AM IST (Updated: 25 March 2021 12:46 AM IST)
t-max-icont-min-icon

ஆலங்குடி பஸ் நிலையத்திற்குள் பஸ்கள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

ஆலங்குடி, மார்ச்.25-
ஆலங்குடி பஸ் நிலையத்திற்குள் பஸ்கள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
பஸ் நிலையம்
ஆலங்குடியை சுற்றி கிராமப்புறங்கள் ஏராளமாக உள்ளன. ஆலங்குடி பஸ் நிலையத்தில் இருந்து சென்னை, கோவை, புதுக்கோட்டை உள்ளிட்ட ஊர்களுக்கு நேரடியாக பஸ் வசதி உள்ளது. இதுதவிர ஆலங்குடி வழியாகவும் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில் ஆலங்குடி பஸ் நிலையத்திற்குள் பஸ்கள் அனைத்தும் முழுமையாக வந்து செல்வதில்லை. ஒரு சில பஸ்கள் மட்டுமே பஸ் நிலையத்திற்குள் வந்து செல்கின்றன.
 பஸ் நிலையத்திற்கு முன்பாக உள்ள முக்கத்தில் பயணிகளை இறக்கிவிடுவது உண்டு. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைகின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் பெரும் சிரமம் அடைகின்றனர். ஆட்டோக்களுக்கு கூடுதல் கட்டணம் கொடுத்து செல்ல வேண்டி உள்ளது. எனவே ஆலங்குடி பஸ் நிலையத்திற்குள் அனைத்து பஸ்களும் வந்து செல்ல வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குடிநீர் வசதி
பஸ் நிலையம் அருகே தான் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகமும் உள்ளது. மக்கள் பிரதிநிதிகளும் பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். மேலும் பஸ் நிலையத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும்.குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Next Story