புகளூரில் உள்ள தெருக்களில் கிருமி நாசினி தெளிப்பு


புகளூரில் உள்ள தெருக்களில் கிருமி நாசினி தெளிப்பு
x
தினத்தந்தி 25 March 2021 12:59 AM IST (Updated: 25 March 2021 12:59 AM IST)
t-max-icont-min-icon

புகளூரில் உள்ள தெருக்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

நொய்யல்
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று வெகுவாக குறைந்ததால் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தற்போது வைரஸ் தொற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதன் காரணமாக வெளியிடங்களுக்கு செல்பவர்கள் கட்டாயம் முககவசம் அணிந்து செல்ல வேண்டும். செல்லும் இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அதேபோல, கரூர் மாவட்டம் புகளூர் ரயில்வே காலனி குடியிருப்பு பகுதியில் ஓலப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும்பொருட்டு சாலை மற்றும் தெருக்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. மேலும், கொசுக்கள் கடிப்பதன்மூலம் டெங்கு, மலேரியா உள்ளிட்ட பல்வேறு நோய்கள் வராமலிருக்க எந்திரங்கள் மூலம் கொசு மருந்தும் அடிக்கப்பட்டது.


Next Story