துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு
துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
புதூர்,மார்ச்.
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பல்வேறு இடங்களில் துணை ராணுவத்தினருடன் இணைந்து போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஊமச்சிகுளம், காதக்கிணறு, செட்டிக்குளம், வீரபாண்டி, ஆலத்தூர் ஆகிய இடங்களில் போலீஸ் துணை சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரன், சப்-இன்ஸ்பெக்டர் சந்திராதேவி மற்றும் தலைமை காவலர்கள், பெண் போலீசார், துணை ராணுவத்தினர் கலந்து கொண்ட கொடி அணிவகுப்பு நடந்தது.
இதேபோல் கொட்டாம்பட்டி, கருங்காலக்குடி, சொக்கலிங்கபுரம் ஆகிய பகுதிகளில் துணை ராணுவ படை வீரர்களின் கொடி அணிவகுப்பு நடந்தது. இதில் மேலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு ரகுபதிராஜா, இன்ஸ்பெக்டர் செல்வராஜ், சப்-இன்ஸ்பெக்டர் சுதன் மற்றும் போலீசார், துணை ராணுவ படையினர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story