பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த 2 வாலிபர்களுக்கு 4 ஆண்டு சிறை
பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த 2 வாலிபர்களுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து நெல்லை கோர்ட்டு தீர்ப்பளித்தது.
நெல்லை, மார்ச்:
நெல்லை சங்கர்நகர் பகுதியைச் சேர்ந்தவர் பூர்ணவள்ளி. தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் கருப்பூர் பகுதியைச் சேர்ந்த ஜோஸ்வா இமானுவேல் ராஜ் (வயது 35), விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியை சேர்ந்த வினோத்குமார் (29) ஆகிய 2 பேரும் சேர்ந்து முன்விரோதம் காரணமாக தாழையூத்து பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த பூர்ணவள்ளியை அவதூறாக பேசி கத்தியை காட்டி மிரட்டி சென்றுள்ளனர். இதுகுறித்து பூர்ணவள்ளி தாழையுத்து போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜோஸ்வா இமானுவேல்ராஜ், வினோத் குமார் ஆகியோரை கைது செய்து அவர்கள் மீது நெல்லை மகளிர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர் வழக்கை விசாரித்த நீதிபதி ராஜேஷ்குமார் குற்றம் சாட்டப்பட்ட ஜோஸ்வா இமானுவேல் ராஜ், வினோத்குமார் ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
Related Tags :
Next Story